Friday, August 5, 2016

எண்ணிக்கை

புலம்பல்கள் ஆயிரம்
வடிகால்கள் சில்லறை

எண்ணங்கள் கோடி
வார்த்தைகள் சில நூறு

பார்ப்பவை அதிகம்
மனதில் நிற்ப்பவை ஒன்றிரண்டு

சத்தங்கள் கணக்கில்லை
அதன் அர்த்தங்கள் கை விரல்களில் அடங்கும்

லட்சியம் கணக்கிடுகிறேன்
எட்டுபவை எண்ணுகிறேன் 

No comments:

Post a Comment