நாளைக்கான ஓட்டங்களில் இன்று ஏனோ கை நழுவி போய் விட்டன
சேர்த்து வைத்தவை எல்லாம், நேரங்களாக மாறும் மாயம் உண்டோ?
உண்மை உணரும் நேரங்களில் இளமைதான் திரும்பி விடாதோ?
உன் கை பிடித்த நாட்களில் நேரம் ஏன் எதிரி ஆனதோ?
நண்பனை போல் கூட வருவதாய், பிரிவின் போது நேரம் ஏமாற்ற
விரல் இடுக்குகளில் கசிந்து விட்ட தண்ணீர் போலவும்
அணை போல் தடுத்து கைவச படுத்த நினைத்தது போலவும்
என்னை நான் ஏமாற்ற
உருண்டுஓடும் உந்தன் பாகுபாடு இல்லாத பார்வை தனில்
சிறு சருகாய் என்னை மாற்றினாய்

No comments:
Post a Comment