Tuesday, October 2, 2012

எழுவது புதிதல்ல வீழ்வது அதற்கு தானே ...

எழுவது எனக்கு புதிதல்ல ...

கீழே விழுந்தே நான் எழ கற்றுக் கொண்டேன் ...

வீழ்ந்து விட்டேன் என எள்ளி நகை ஆடுகிறாய் ...

எனக்கு மகிழ்ச்சி ...

உன் சிரிப்பின் ஒலி ஒவ்வொன்றையும் நான் சேகரிக்கிறேன் ...

தினமும் அதை கேட்டே காலையில் எழ நினைக்கிறேன் ..

எனது வாழ்வின் நோக்கத்தை அது தெளிவாக்குகிறது ..

நான்  எழுந்த பின்பு உனது பொய் சிரிப்பை என்னிடம் காட்ட வேண்டும் அல்லவா ..

கண்ணாடியில் வரும் உன் பிம்பத்தை பார்த்து உன் பொய் சிரிப்பை சரி செய்து கொள் ..

நீ நடிகன் என்பதை நான் புரிந்து கொண்டேன் .. உன் நடிப்பு சிறக்க எனது வாழ்த்துக்கள் ..

உனது பொய் சிரிப்பு ஒவ்வொன்றும் என் வெற்றியின் கனியாகவே சுவைக்க போகிறேன் ...

நீ என் எதிரி அல்ல .. எனது ஏணி ...

இது என் முடிவல்ல எனது தொடக்கம்...

வாழ கற்றுக்கொள் ...

No comments:

Post a Comment